லால்குடி, ஜூலை 18 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14.7.2024 அன்று காலை 8 மணி அளவில் லால்குடி கழக மாவட்டம் டோல்கேட் பகுதியில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட் தலைமை வகித்தார்.வை.சித்தார்த்தன், மு. அறிவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். கலியபெருமாள், ராமசாமி,கு.பொ.பெரியசாமி, பிச்சைமணி, மணிவாசகம், ஆசைத்தம்பி,முரளிதரன், ராஜேந்திரன், முத்துச்சாமி, இசைவாணன், யுவராஜ், தனிஷ்கா, இந்து, வீரமணி, பாபு, சித்தார்த் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும், தோழமை இயக்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.