சென்னை, ஆக. 19- பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப மற்றும் பல்வேறு சேவை அலுவலக இடங்களை சிறிய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான இடங்களை பகிர்ந்து கொள்ள தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி நிறுவன மான மைபிரான்ச் இணைந்து பணியாற்றுதலுக்கான இடங்களின் தேவை அதிகரித்து வருவதால் தென்னிந்தி யாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
அய்தராபாத், பெங்களூர், மதுரை, சென்னை, மங்களூர், விசாகப்பட்டினம் மற்றும் சேலம் போன்ற நகரங்களில் ஏற்கனவே தனது இருப்பைக் கொண்டுள்ளது, மேலும் அதிகரித்து வரும் தேவையைப் பார்க்கும்போது, வேலூர், வாரங்கல், செகந்திராபாத், திருப்பதி, புதுச்சேரி, ராஜமுந்திரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களுக்கும் விரிவடைகிறது.
இந்த மய்யங்கள் 40,000 சதுர அடி பரப்பளவில் 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமரும் வகையில் அமைந்துள்ளன என்று மை பிராஞ்ச் நிறுவனம் தெரிவித் துள்ளது.