நீட் தேர்வை கண்டித்து திராவிட மாணவர் கழகம் – இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம் (22-8-2023)

Viduthalai
1 Min Read

திணிக்காதே திணிக்காதே! 

நீட் தேர்வைத் திணிக்காதே!

பறிக்காதே பறிக்காதே! 

மருத்துவக் கனவைப் பறிக்காதே!

எத்தனைப் பலிகள்? 

எத்தனைப் பலிகள்?

நீட் தேர்வுத் திணிப்பினால் 

எத்தனைப் பலிகள்?

ஒவ்வோராண்டும் 

எத்தனைப் பலிகள்?

தேவையில்லை தேவையில்லை!

நீட் தேர்வு எங்களுக்குத் 

தேவையில்லை!

வேலையில்லை வேலையில்லை!

ஒன்றிய அரசின் கங்காணிக்குத் 

தமிழ்நாட்டில் வேலையில்லை!

கரையான்களெல்லாம் புற்றெடுக்க

கருநாகம் வந்து குடியேறுமா?

எங்கள் வரிப்பணத்தில் 

கல்லூரி கட்டினால்

வடநாட்டவர்க்குத் தாரைவார்ப்பா?

கல்வியை வணிகப் பொருளாக்கும் 

நீட் தேர்வை ஒழித்துக் கட்டு!

காவியை நாட்டில் திணிக்கப் பார்க்கும்

பாஜகவே மூட்டை கட்டு!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கெதிராய்

நீட்டைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சே!

தமிழ்நாட்டு மாணவர்

உயிரைப் பறிக்கும்

ஆளுநர் ஆர்.என்.ரவியே!

வெளியேறு வெளியேறு

தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு!

ஒப்புதல் வழங்குக, ஒப்புதல் வழங்குக!

குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!

நீட் விலக்கு மசோதாவுக்கு

தமிழ்நாட்டின் மசோதாவுக்கு

குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!

தூண்டாதே தூண்டதே!

ஒன்றிய அரசே தூண்டாதே!

மாணவர் புரட்சியைத் தூண்டாதே!

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

நீட் எதிர்ப்புப் போராளிகளுக்கு 

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

ஓய மாட்டோம் ஓய மாட்டோம்!

நீட் தேர்வை ஒழிக்கும் வரை 

ஓய மாட்டோம் ஓயமாட்டோம்!

ஆபத்து! ஆபத்து!

சமூக நீதிக்கு ஆபத்து!

நீட் தேர்வால் ஆபத்து!

பிற்படுத்தப்பட்டோருக்கு ஆபத்து! 

தாழ்த்தப்பட்டோருக்கு ஆபத்து! 

கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

வாழ்க வாழ்க வாழ்கவே 

தந்தை பெரியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே 

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே 

தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

தலையிடாதே! தலையிடாதே! 

ஒன்றிய அரசே தலையிடாதே! கல்வித்துறையில் தலையிடாதே!

மீறாதே, மீறாதே! 

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறாதே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *