அஞ்சலகங்களில் குறைந்த பிரீமியத்தில் – விபத்து காப்பீட்டுத் திட்டம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம்

2 Min Read

சென்னை, ஜூலை 17 அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங் களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (அஞ்சல்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
விண்ணப்பப் படிவம், அடை யாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, அஞ்சல்காரர் கொண்டு வரும் திறன்பேசி (ஸ்மார்ட் போன்) மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ரூ.10 லட்சம்/ 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்)
ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி
விபத்தினால் ஏற்படும் மருத்து வச் செலவுகள் (உள்நோயாளி செல வுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, நாள்தோறும் தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்)
விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.

ஆண்டிற்கு வெறும் ரூ.555இல்/ரூ.755இல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப் புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/அஞ்சல்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு சென்னை வடகோட் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *