திருச்சி, திருவெறும்பூர் பேராசிரியர் வீம.அரவிந்த் அரையாண்டு விடுதலை சந்தா 1000 ரூபாயை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார் (16.07.2024).
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
சின்னப்பம்பட்டி நினைவில் வாழும் மு.உலகநாதன் மாரியம்மாள் பேரனும், உ.கென்னடி, கவுசல்யா மகனுமான மரு.கெ.அறிவுமணி தான் அரசு கால்நடை மருத்துவராக பணியமர்த்தப்பட்டதன் மகிழ்வாக ரூ.10,000த்தை பெரியார் உலகத்திற்கு வழங்கினார். வாழ்த்துகள்.
நன்கொடை
தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் இணையர் சி.காந்திமதி (வயது 75) அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவாக (17.7.2024) அவரது இணையர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளார்.
பகுத்தறிவாளரும் 50 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை இதழ் வாசிப்பாளருமாகிய
மு.வி.சோமசுந்தரம் அவர்களின் 93ஆவது அகவைத் (11.7.1932) துவக்க மகிழ்வாகவும், அவரின் இணையர் சோ.வச்சலா அவர்களின் 85ஆவது (1.7.1940) அகவைத் துவக்க மகிழ்வாகவும் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.1000மும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தற்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. நன்றி!