17.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் நியமனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* போலி சான்றிதழ் தந்து அய்.ஏ.எஸ். ஆக தேர்வானதாக குற்றம் சாட்டப்பட்ட பூஜா கேட்கரின் மாவட்ட பயிற்சி நிறுத்தம். மணிப்பூர் பயிற்சி அகாடமிக்கு வருமாறு ஆணை.
தி இந்து:
* நிர்வாகப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 50% இடஒதுக்கீடு மற்றும் மேலாண்மை அல்லாத பதவிகளில் 75% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தும் மசோதாவுக்கு கருநாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என்றால், தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் விதிகளில் தளர்வு கோரி அரசிடம் முறையிடலாம்.
– குடந்தை கருணா