விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!

Viduthalai
1 Min Read

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்னியூர் சிவா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (16.7.2024) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெரியார் திடலுக்கு வருகைதந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்னியூர் சிவாவுக்கு பொன்னாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கவுதம சிகாமணி பொன்னாடை அணிவித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *