திருச்சி, ஜூலை 17- பெரியார் மருத்துவக் குழுமம், ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மார்பகம் மற் றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 14.07.2024, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் திருச்சி இச்சிக்காமலைப்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் குமார மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.பொன்ராமன் (எ) சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.நேரு மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்க இரண்டாம் துணை ஆளுநர் எஸ்.விஜயலெட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்து வமனையின் தன்னலம் பாராத மருத்துவ சேவையை வெகுவாக பாராட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் விளக்கினார்.
ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்து வர் சுகிர்தா மற்றும் மருத்துவர் பேச்சி யம்மாள் ஆகியோர் தலைமையில் புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் பி.மஞ்சுளா வாணி மற்றும் மருத்துவர் சீனிவாசன் பங்கேற்ற பொதுமருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பெரியார் மருத்துவக் குழுமத்தின் உதவியுடன் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் 62 பேர் பொது மருத்துவ முகாமிலும் மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் 31 பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். திருச்சி கிளாசிக் அரிமா சங்கத் தலைவர் லயன் முத்து, செயலாளர் லயன் ஞானமணி மற்றும் பொருளாளர் லயன் எட்வின் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மருத்துவ முகாமினை ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர்
சிவ.அருணாச்சலம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.