16.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பண மசோதாக்கள் சட்டம் நிறைவேற்றம் விவகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன் தீர்ப்பு: மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நம்பிக்கை.
* அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூர் மாவட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள் படிக்க தடையாக இருக்கும் எதையும் உடைப்பதே எங்கள் பணி என சூளுரை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அளித்திட வரைவுத் திட்டத்தை தருமாறு அதிகாரிகளுக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் உத்தரவு.
*பீகார் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி தர வேண்டும் – நிதிஷ் குமார் கட்சி மோடி அரசுக்கு அழுத்தம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் பி.எம்.-சிறீ கல்வி உதவி திட்டத்தை மறுத்த மூன்று மாநிலங்களான மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப் மாநிலத்திற்கு நிதி உதவி நிறுத்தம். தமிழ்நாடு, கேரளா, டில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய அய்ந்து மாநிலங்கள் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேருக்கு நீதி கிடைக்கும்: வரி செலுத்துவோரின் பணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்வதற்கு வசதி படைத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கும் முறையின் நெறிமுறை தாக்கங்களை ராகுல் விமர்சனம்.
தி இந்து:
* மத்திய மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது
தி டெலிகிராப்:
* எட்டு கோடி புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற ஒன்றிய அரசின் கூற்றுக்கு 15.7.2024 அன்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது, வேலைவாய்ப்பின் “தரம் மற்றும் சூழ்நிலைகளில்” கவனம் செலுத்த தவறியதால், வேலை உருவாக்கம் என்று கூறுவதற்கு அரசாங்கம் சில ” புள்ளிவிவர ஏமாற்று வித்தைகளை” செய்துள்ளது என்று குற்றம் சாட்டியது.
* டில்லி பல்கலைக்கழகத்தில் மனுஸ்மிருதியின் சில பகுதிகள் மறைமுகமாக எல்எல்பி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து நீதியியல் மற்றும் பிராமணக் கண்ணோட்டத்துடன் பிரத்தியேகமாக கையாள்வதாக பல கல்வியாளர்கள் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் 1.6 மில்லியன் குழந்தைகளுக்கு 2023இல் தடுப்பூசியே இல்லை என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா