சென்னை, ஜூலை 15- சென்னையில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைப்பது குறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத் தினார்.
10 நூலகங்கள்
சென்னை பெரு நகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 2024-2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை செயல் படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட் டம், சென்னை பெரு நகர் வளர்ச்சி குழும அலு வலகத்தில் 12.7.2024 அன்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் துறை ரீதியாக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங் களை விரைவாக செயல் படுத்துவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.
அப்போது அவர் முதல மைச்சரின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை முழுமை யாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், சென்னை பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள் மின் வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட மய்யங்களாக மேம்படுத்துவது குறித்து பொது நூலக இயக்கக அலுவலர்களுக்கு ஆலோ சனை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னைப் பெருநகர் பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல்களை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் அமைப்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென் னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.