செய்யாறில் சிறப்பான வரவேற்பு
செய்யாறு, ஜூலை15- செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் 13.7.2024 பிற்பகல் 4 மணியளவில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தின் இரு சக்கர வாகன பரப்புரை பயணக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் செய்யாறு அ.இளங் கோவன் தலைமை வகித்து பயண நோக்கத்தை விளக்கி கூறினார். செய்யாறு நகர கழக தலைவர் தி.காம ராசன், பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
செய்யாறு தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் ஓ.ஜோதி, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தான் இந்தியாவிற்கே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவதற்கு முன் னோடியாக இருந்தது என்று கூறினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் ஏன் என்பதை குறித்து விரிவாக பேசினார்.
முன்னதாக திமுக சார்பில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பரப்புரை குழுவினர்களுக்கு சால்வை அணிவித்து, பிஸ்கட், குளிர்பானங்கள் வழங்கி மகிழ்ந்தனர். வெம்பாக்கம் ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன், செய்யாறு நகர திமுக செயலாளர் வழக்குரைஞர் கே.விஸ்வநாதன், திராவிடர் காக மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர், மாணவர் கழக செயலாளர் வெ.இளஞ்செழியன், வடமணப்பாக்கம் கிளை தலைவர் மு.வெங்கடேசன், வெம்பாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் யு.ராஜேஸ், இளைஞரணி கழக செயலாளர் ந.சீனிவாசன், எஸ்.அரவிந்த், மனோஜ்குமார், யோகநாத், பி.பாரத், பெருங்களத்தூர் வெங்கடேசன், சிவகுமார், முரளி, விஜய், பார்த்திபன், ஆதி அருள் உள்பட செய்யாறு திராவிடர் கழக, மாணவர் கழக தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பெரியகுளத்தில் பரப்புரை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 13.7.2024 காலை 9.00 மணி அளவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது.
இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசு தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார். நகர பொருளாளர் முருகன், வழக்கறிஞர் காமராசு, மாரிமுத்து, பகுத்தறிவாளர்கள் மாவட்ட தலைவர் திராவிட செல்வன், ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வாணன், இப்ராஹிம் பாஷா, ஒன்றிய அமைப்பாளர் ஆதித்தமிழர் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நான்காம் குழு
நீட் தேர்வு எதிர்ப்பு இருசக் கர வாகனப் பரப்புரைப் பயணத் தின் மூன்றாம் நாளில் கோபி, மேட்டுப் பாளையம் ஆகிய மாவட்டங்களில் தன்னுடைய பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டது.
தாராபுரத்திலிருந்து 11.07.2024 அன்று காலை 10 மணிக்கு புறப்பட்ட நான்காம் குழு, மூன்றாம் நாளில் மேட்டுப்பாளையம், கோபி மாவட் டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவாறே சேலம் நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் 13.-07.2024 அன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலா ளர் சு.அரங்கசாமி, கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர், கோவை வடக்குப் பகுதி கவிஞர் கவி கிருட்டிணன், கா.சம்பத் ஆனைகட்டி, வடக்குப் பகுதி செயலாளர் ச.திராவிட மணி, திமுக கஸ்பர், தோழர் பீட்டர், அ.மு ராஜா,திமுக பாலகிருஷ்ணன், சிபிஅய் ஒன்றிய இணைச் செயலாளர் வேலுமணி உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு ரூ.5000-/ பயணச் செலவாக கழகப் பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும், ”நீட் எதிர்ப்பு ஏன்?” புத்தகங்கள் 100 பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நான்காம் குழு, திருப்பூர், ஈரோடு கழக மாவட்டங்கள் பல்வேறு இடங்களில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபி கழக மாவட்டம் நம்பியூரில், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமையில் நகரம் முழுவதிலும் கழகக்கொடிகள் கட்டப்பட்டு, 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கழகத் தோழர்கள் புடைசூழ, வரவேற்பு அளிக்கபட்டது. அதைத்தொடர்ந்து பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவஹர் பாபு, மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் என்.சி சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சதீஷ்குமார், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பேரூராட்சி திமுக மேனாள் தலைவர் கீதா முரளி, திமுக ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
இறுதியில் கழகப் பேச்சாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவகர் பாபு நூறு புத்தகங்களையும், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தொன்னுசாமி 100 புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தங்கவேல் 100 புத்தகங்களையும், திமுக பேரூராட்சி மேனாள் தலைவர் சீதா முருகன் இரண்டு புத்தகங்களையும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் யாழ் சாமி தலைமை வகித்தார். பெரியார் பெருந்தொண்டர் முத்து முருகேசன், பவானி ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் தா.மு யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார். மகளிர் பாசறை செயலாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அதேபோல், கோபி கழகம் மாவட்டம் – இருமாத்தூர் மேடு, கழகமாவட்டம் காரமடை, நரசிம்மநாயக்கன்பாளையம், அவிநாசி ஆகிய இடங்களில் கழகச் சொற்பொழிவாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார்.
ஈரோடு கழக மாவட்டம் கவுந்தப் பாடியில் தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு தா.சண்முகம் தலைமையில் வரவேற்பும், பரப்புரைக்கூட்டமும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாவட்டச் செயலா ளர் மா.மணிமாறன், மாநகரச் செயலாளர் தே.காமராஜ், கோபி மாவட்ட செயலாளர் சென்னியப்பன், பேராசிரியர் ப. காளிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் நல்லசிவம், பவானி ஒன்றிய செயலாளர் அசோக்குமார், செ.பிரகாசன், சசிகுமார், கவுந்தி பாலன், மதிமுக மதியழகன், திமுக பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, குணசேகரன் தொமுக, 4ஆவது வார்டு செயலாளர் தனசேகர், 3ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், சிவசம்பு நாதன், ஜோசப், பசுபதி, ஸ்ரீதர், சீனிவாசன், பாலு, வேலு, கோபாலன், ஏசான் மலை உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர். கழக பேச்சாளர் த.மு.யாழ்திலீபன் சிறப்புரையாற்றினார். பரப்புரை பயண செலவிற்கு மாவட்டத் துணைச் செயலாளர் பட்டுச்சாமி ரூ. 500 அளித்தார். கழக மாவட்டம் சித்தோடு ஆகிய இடங்களிலும் பரப் புரை தொடர்ந்து சித்தோடு உள்ளிட்ட இடங்களில் நான்காம் குழு பிரச்சாரம் செய்தவாறே சேலம் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
முதல் குழு
கன்னியாகுமரி முதல் சேலம் வரை பயண முதல் குழுவின் நான்காம் நாளில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர், 102 வயது பொத்தனூர் க.சண்முகம் கலந்து கொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தினார்.
11.07.2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கிய முதல் குழு, நாகர்கோவில் ஸ்டேடியம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பிரச்சாரப் பயணம் முடித்து திரு நெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, தூத்துக்குடி வந்தடைந்தது.
12.07.2024 அன்று காலை 10 மணிய ளவில் விளாத்திகுளத்தில் இருந்து தொடங்கும் இரண்டாம் நாள் பரப்பு ரைப் பயண முதல் கூட்டத்தில் உசிலம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித் பாண்டியன் பயணச் செலவாக தொகை ரூபாய் 5000, அருப்புக்கோட்டை மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி ரூ.500, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம் ரூ. 500, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.நகரச் செயலாளர் வேல்சாமி ரூ.5000 நன்கொடையாக பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினர். தலைமை கழக அமைப்பாளர் மதுரை வெ.செல்வம், உசிலம்பட்டி பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.மன்னர்மன்னன், உசிலம்பட்டி மாவட்டச் செயலாளர் முத்துகருப்பன், மாவட்டச் செயலாளர் ஆதவன் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.இரவு போடிநாயக்கனூர் வந்தடைந்தது.
மூன்றாம் நாளான 13-07-2024 அன்று காலை 11.30மணி அளவில் நிலக்கோட்டை பகுதியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாசு 500 ரூபாய்க்கு புத்தகங்களை, தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். பயணத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன், தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் காஞ்சி துரை உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடனிருந்தனர். பயணக்குழு இரவு திருவரங்கம் வந்தடைந்தது.
நான்காம் நாளான 14.7.2024 அன்று மாலை 7 மணியளவில் வேலாயுதம் பாளையம் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் புகழுர் திமுக நகர மன்ற தலைவர் ஏ.குணசேகரன் 1000 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா.செந்தூரபாண்டியனிடடம் பெற்றுக்கொண்டார். மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
102 வயதிலும் போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர், பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் பரப்புரைப் பயணத்தின் முதல் குழுவின் பிரச்சாரக் கூட்டம் பொத்தனூரில் எழுச்சியோடு நடைபெற்றது,