தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2024) திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, ‘புனித அன்னாள் தொடக்கப் பள்ளி’யில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு உணவு பரிமாறினார். மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களுடன் உரையாடினார். அதற்கு முன்பாக மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.