சென்னை, ஆக. 20 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது . சென்னை வள்ளுவ ர் கோட்டம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற் றினார் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு மாண வர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் ஆளுநரையும் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பட்டினிப் போராட்டம் (20.8.2023) நடை பெற்றது , புதுச்சேரி, காரைக்காலிலும் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது
வள்ளுவர் கேட்டத்தில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், பி.கே. சேகர்பாபு, உதயநிதி, மா. சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற் றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.