தி.மு.க.விற்குக் கிடைத்த ‘போனஸ்’ வெற்றியாகும்
பொள்ளாச்சி நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்
பொள்ளாச்சியில் நடைபெற்ற நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார் (13.7.2024)
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் (தி.மு.க.) ஈஸ்வரசாமி தமிழர் தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்தார். (13.7.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொள்ளாச்சி நகர் மன்றத் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் , பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் (தி.மு.க.) ஈஸ்வரசாமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
தமிழர் தலைவரிடம் தாராபுரம், கணியூர், பொள்ளாச்சி கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை சந்தா தொகைகளை வழங்கினர்
பொள்ளாச்சி, ஜூலை 14 பொள்ளாச்சி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டு விழா பொதுக்கூட்டம் கோவை – பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 13.07.2024’அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி கழக மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து தலைமை தாங்கினார்,
காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம், கோவை மாவட்ட தலைவர் மா.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் தம்பி பிரபாகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் திவ்ய பாரதி வரவேற்புரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வர சுவாமி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி பாராட்டி உரை நிகழ்த்தினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
‘‘விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி இந்திய அளவில் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழநாட்டில் தற்போதைய இடைத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றி என்பது – மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி போட்டியிட்ட 40 இடங்களிலும் பெற்ற வெற்றிக்கு ‘போனஸ்’ வெற்றியாகும்’’ என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர் மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் என்.கே.பகவதி, சி.பி.அய்.எம் வட்ட செயலாளர் மகாலிங்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி, மனித நேயம் மக்கள் கட்சி பொறுப்பாளர் சுலைமான், திமுக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் கா.இமயவரம்பன், ப.க. மாநில அமைப்பாளர் தரும வீரமணி, மாவட்ட துணை தலைவர் ஜெ.செழியன், மாவட்ட துணை செயலாளர் கி.சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் சு.ஆனந்தசாமி, நகரத் தலைவர் சு.வடிவேல், நகரச் செயலாளர் அர.நாகராஜ், கோவை மாநகர தலைவர் தி.க. செந்தில்நாதன், கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.பிரவின்குமார், நகர அமைப்பாளர் கா.வீரமலை, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் முருகானந்தம்,மாவட்ட இளைஞரணி தலைவர் கு.கார்த்தி, மாவட்ட மாணவர் அணி தலைவர் இரா வின்சென்ட் ,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் கோ சக்திவேல் ,மா தினேஷ் குமார், இலா மனோஜ் குமார், சபரிகிரி, ஆ.பேரறிவாளன், ஆ.அன்பழகன் ,வி.வர்ஷினி, மா இலக்கியன் ,வீர.சகுந்தலா, அ.வீரமணி, நா.சு.பொற்கொடி, நா.சு. யாழ் மொழி ,சி.கனகராஜ், ஆனைமலை ஒன்றிய தலைவர் ஆ..அறிவழகன், வி .வருண், சி. கனகராஜ், முத்து தினேஷ்; கோவை தொழிலாளர் அணி வெங்கடாசலம் ,சுந்தராபுரம் பகுதி தலைவர் கே குமரேசன், பகுதி துணைத்தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார்.