திருவாரூர் மாவட்டம் – குடவாசல் ஒன்றியம், மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்ட மேனாள் விவசாய அணி செயலாளரும், குடவாசல் ஒன்றிய கழக தலைவரும், ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் துணைவியாரும், சுயமரியாதைச் சுடரொளி அன்பழகன், குடவாசல் ஒன்றிய கழக துணைத் தலைவர் அம்பேத்கர் மற்றும் அன்புமணி ஆகியோரின் தாயாருமான பொன்னம்மாள் (வயது 87) வயது முதிர்வின் காரணமாக 10.7.2024 அன்று மதியம் 2 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
– – – – –
பெரியார் திடல் பணித் தோழர் வாணியின் தாயார் தேவகி கணேசன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாருக்கு வீரவணக்கத்தையும், அவரது இணையர் கணேசன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். – பெரியார் திடல் பணித் தோழர்கள்.