9.9.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்; கல்வித் துறை அமைச்சரும், ‘தமிழர் தலைவர்’ அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவருமான மரியாதைக்குரிய செம்மலை அவர்களை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், கா.நா.பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ.தமிழர் தலைவர், தருமபுரி கார்க்கி நேசன் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து, “நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும்பயண 5 குழுவினரின், பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுக்கூட்ட செய்தியையும் தெரிவித்தனர்.
மேனாள் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் பழைய முறையான 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே “மருத்துவக் கல்விக்கு” அனுமதி வழங்க வேண்டும் என்றும், “நீட்” அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும்பயண 5 குழுவினரின், பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுக்கூட்ட செய்தியையும் தெரிவித்தனர்
Leave a Comment