ஈரோடு, ஜூலை 14 கடந்த 11.7.2024 வியாழன் மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம் வாசகர் வட்ட தலைவர் கனிமொழி நடராசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள் “தமிழ்நாடு 1967” என்ற தலைப்பில் திராவிட இயக்கம் செய்த அளப்பரிய சாதனைகள் , வீரமாமுனிவர், கால்டுவெல், ஆகியோர் தமிழ் மொழிக்கும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பதனை தமிழ் இலக்கியத்தை கற்றுணர்ந்தும் ஆராய்ச்சி செய்தும் தனித்து இயங்கும் திராவிட மொழி தமிழ் என்பதனை மெய்ப்பித்தனர். என்றும், அண்ணாவின் தனித்தமிழர் ஆட்சி, கலைஞர் ஆட்சி. இன்று நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புக்களை மிகச் சிறப்பாக விளக்கப் பேசினார்.
முன்னதாக தி.மு.க வழக்குரைஞர் அணி இணைச்செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன் “திராவிட இயக்கமும் கல்வியும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி இன்று நடக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி செய்துவரும் கல்விப்புரட்சி, அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடைந்து வருகிறது என்பதனை விளக்கிப் பேசினார்.
கூட்டத்திற்கு வருகை தந்தோரை கவிதா நந்தகோபால் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ப.காளிமுத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக சி.ஆனந்தலட்சுமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகர தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம், சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் (எ) மணி, மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி பகுதி தி.மு.க செயலாளர்கள் குறிஞ்சி தண்டபாணி, ராமச்சந்திரன், வி.சி. நடராஜன், அக்னி சந்துரு. மாநகர துணை செயலாளர் சந்திரசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் இளைய கோபால், L.P.F தமிழ்ச் செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், நைல் ராஜா, திராவிடர்கழகம் சார்பாக ஈரோடு த. சண்முகம், மாவட்ட தலைவர் இரா. நற்குணன், தேவராஜ், கோ. திருநாவுக்கரசு, தே.காமராஜ் மற்றும் தி.மு.க மகளிரணியினர், பொதுமக்கள் திரளாகத் திரண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் கனிமொழி நடராசன் பெரியார் படம் பொருந்திய நினைவுச்சின்னம் வழங்கினார்.