வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை ரூ.7,000த்தை வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கோவை, 13.7.2024)
கோவை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத் தலைவர் கோவை மா.சந்திரசேகரன் தலைமையில் பயனாடை அணிவித்து தோழர்கள் வரவேற்றனர். * வழக்குரைஞர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: கோவை மாவட்டக் கழகத் தலைவர் மா. சந்திரசேகரன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார், பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குநர் டாக்டர் கவுதமன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (கோவை, 13.7.2024)