புறப்பட்டது காண் புலிப் போத்துகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புறப்பட்டன
புலிப் போத்துகள்
புல்லட் வண்டியிலே
புதையுண்டுப் போன
சமூகநீதியாம்
மூச்சுக்காற்றை
மூச்சடக்கி
மீட்டிடவே
புறப்பட்டன
புலிப் போத்துகள்!
வழியெலாம்
வாழ்த்தி மகிழுங்கள்!
வரவேற்புப்
பதாகையைத்
தூக்கிப் பிடியுங்கள்!
உபசரிப்பாம்
பொற்கரத்தால்
விருந்துகளைப்
படைத்திடுவீர்!
‘‘எங்களுக்காக
அல்லவோ
இத்தனைத் தூரம்
இத்தனைத் தூரம்
பயணிக்கிறீர்!
பயணிக்கிறீர்!
என்று
இன்ப முகங்காட்டி
ஆரத் தழுவுங்கள்!
உற்சாகம்
ஊட்டுங்கள்
ஊர்தியில்
வருவோர்க்கு!
போராடிப் ெபற்ற
சமூகநீதி
செல்வத்தை
போக்கிரிகள்
வழிப்பறி
செய்குவதா?
புறநானூற்றுப்
புயல் காற்று
தாலாட்ட
பிறந்தவர்காள்!
வைரம் பாய்ந்த
இருபால்
வாலிபர்காள்!
பூகம்ப எரிமலையில்
போராட்டப் பயிற்சி பெற்ற
புடம் போட்ட
தங்கங்காள்!
தந்தை பெரியார்
பேருழைப்புப்
பெற்றுத் தந்த
சமூகநீதியாம்
கருவிழியை
மதவாத
மின்னலில்
பறி கொடுப்போமா?
கொள்கைக்
கவசம்
அணிந்தவர்கள்
கருஞ்சட்டை
சிறுத்தைக் கூட்டம்!
கொடியோர்
செயல் அறவே
கொலைவாளினை
எடடா என்றார் – நம்
புரட்சிக் கவிஞர்!
உயிரைப் பறிக்க
அல்ல!
உரிமையினை
மீட்டிடவே!
அது
கொள்கைவாள்!
வெற்றியை
நம் காலடியில்
குவிக்கும்வாள்!
அவாள் இவாள்
கண்ணி வெடிகளை
வீழ்த்திடும்
போர் வாள்!
தகைசால்
தமிழர்
வீரமணி
இருக்கையிலே
வெற்றி சிகரம்
நாம் தொடும்
தூரத்திலே!
முற்றுப் புள்ளி
வைக்காவிடின்
பொருளே
மாறிவிடும்
அரைப் புள்ளி
வைத்தாலோ
அரைக் கிணறு
தாண்டுவதே!
முழு மூச்சடக்கி
தாண்டிடுவோம்
இமயத்தை!
நீட்டை
நெட்டித் தள்ளி
நிலை
நிறுத்துவோம்
சமூகநீதியாம்
சரித்திரத்
தேரினை!
‘‘சேலம்
செயலாற்றும்
காலம்!’’
இது அண்ணாவின்
எழுதுகோல்
மெய்யெழுத்து!
எழுக இளைஞரே!
எழுக!
எழுஞாயிறாய்
எட்டிசையும்
ஒளிர்க!
இரு சக்கர
வாகனம்
சுழல்கிறது
வாகைக்
குயிலோ
கூவுகிறது!
பழுத்த நெருப்பில்
பஞ்சாங்கங்கள்
எந்த மூலை?
சந்திப்போம்
சேலத்தில்!
சங்கநாதம்
கேட்கட்டும்!
கொட்டு்க
வெற்றி முரசு!
கனக்கட்டும்
நியாயத் தராசு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *