நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு 12.07.2024 அன்று பயணச் செலவுத் தொகையாக அருப்புக்கோட்டை மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி ரூபாய் 500, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ந. ஆனந்தம் ரூபாய் 500 பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் ஆதவன் உடன் இருந்தார்.