சென்னை, ஜூலை 13- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நிட்டி ஆயோக், 2023-2024ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளி யிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றங்கள் எடுத் துரைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்தக் குறியீட்டில் முன்னோடி மாநிலமாக உருவெடுத்து, 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தற்போதைய வெளியீட்டின்படி தமிழ்நாட்டின் கூட்டு மதிப்பீடு 78 ஆக உயர்ந்துள்ளது. இது 2018-இல் 66 ஆக இருந்தது. இந்த முன்னேற்றம் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதையை எடுத்துரைக்கி றது. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.
சமூக சமத்துவம், பொருளா தார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற் றில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உறுதிப்பாட்டை இது சுட்டிக் காட்டுகிறது. பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பய னுள்ள கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் வர்த்தகம், தொழில் துறைகளில் தமிழ்நாடு தனது முன்னிலையை நிலை நிறுத்தியுள்ளது. மாநிலத்தின் சுகாதார முன் முயற்சிகள் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.
2023-2024-ஆம் ஆண்டில் 97.18 சதவீத மகப்பேறு முறையான மருத்துவமனை களில் நடைபெற்றுள்ளன. அனைத்து மக்களுக்கும் தரமான சுகாதார பரா மரிப்பை உறுதி செய்யும் சமூக சுகாதார திட்டங்களே இந்த சாதனைக்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.