சென்னை, ஜூலை.13- சென்னை மாவட்ட ஆட் சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தை கள் தொடர்பாக பெறப் பட்ட தகவல்களின் அடிப் படையில் 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது உடன் நடவடிக்கையாக குழந்தை யின் விவரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப் பணியாளர்கள் ‘சைல்டு லைன்’ பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மய்ய பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் ஆகியோரால் நேரடி யாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.
குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமண ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருந்தாலோ உடனடி யாக குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக் கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றால் குழந்தையை திருமணம் செய்த மணமகன், மண மகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடை பெறுவதற்கு உடந்தை யாக இருந்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் படும். இளம்வயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப் பட்டால், காரணமான நபர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப் படும். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.