புதுடில்லி,ஆக.20 – பீகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை யடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப் புக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாலி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன், 18.8.2023 அன்று விசாரணைக்கு வந்தபோது, பீகார் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷ்யாம் திவான் கூறுகை யில், ”கடந்த 6ஆம் தேதியே கணக் கெடுப்பு முடிந்து விட்டது. ”விரைவில், பீகார் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயலியில், அந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப் படும்,” என்றார். இதற்கு, மனுதாரர் தரப்பு வழக் குரைஞர், ‘இந்த கணக்கெடுப்பு வாயிலாக, தனிப்பட்ட நபரின் அந்தரங்க உரிமை மீறப்படுகிறது’ என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பீகார் போன்ற மாநிலங்களில், பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்ன ஜாதி என்பது அனைவருக்கும் தெரியும். டில்லி போன்ற இடங் களில் வேண்டுமானால் தெரியா மல் இருக்கலாம்.
‘தனிப்பட்ட நபரின் தகவல் களை பகிரங்கமாக வெளியிடப் போவது இல்லை; இந்த ஜாதியில் இவ்வளவு பேர் உள்ளனர் என்பது போன்ற ஒரு தொகுப்பு தான் வெளியிடப்படும்’ என, ஏற்கெ னவே கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கணக் கெடுப்பிற்காக, ஒரு நபர் தன் ஜாதி பற்றிய விவரங்களை தெரிவித்தால், அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது?
இந்த கணக்கெடுப்பு, ஒருவரது அந்தரங்க உரிமையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஒருவரது சுதந்திரத்துக்கு, உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கேள்விகள், இந்த கணக்கெடுப்பில் உள்ளனவா என தெரிய வேண்டும்.
தற்போதைக்கு பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.
-இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை மறுதினம் ஒத்தி வைத்தனர்.