12.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்விக்கு பிறகும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை. மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கூட மனமில்லாமல் இருக்கிறது என தர்மபுரியில், ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார் மயமாக விடமாட்டேன் – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதி.
* நீட் தேர்வு மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 18இல் விசாரிக்கும்.
* காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பும் என ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில் 225 இடங்களில் வெற்றி பெறுவோம்:-சரத்பவார் நம்பிக்கை.
*இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நோயாக இருந்து தற்போது ஒரு தொற்று நோயாக உருவெடுத்துள்ளது – ராகுல் காந்தி கண்டனம்.
* பூரி கடவுள் விழுந்து பக்தர்கள் காயம். பாஜக அமைச்சரின் தவறான பேச்சு. பூரி வரலாற்றில் இது போல் எப்போதும் நடந்தது இல்லை என மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காட்டம்.
* ‘அரசமைப்புச் சட்டத்தை தாக்கும் ஆர்எஸ்எஸ் முயற்சிகளை நிறைவேற்ற மோடி அரசின் சிறு சிறு (சலாமி) தந்திரங்கள்’, டில்லி பல்கலைக்கழக பாடத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பதற்கு காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி பல்கலைக்கழகத்தின் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்) கற்பிப்பதற்கான திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதன் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது, இது ஆசிரியர்களின் ஒரு பிரிவினர் கடும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மும்பையில் உத்தவ் தாக்கரே, சரத்பவார், அகிலேஷ் யாதவ் ஆகியோரை மம்தா சந்திக்கிறார்.
* 2020இல் டில்லி அருகே இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM), அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க அதன் போராட்டத்தை ஆகஸ்ட் 9-ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
– குடந்தை கருணா