செங்கல்பட்டு, ஜூலை 11- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 24.6.2024 அன்று காலை 11 மணிக்கு செங்கல்பட்டு புத்தர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தலைமை வகித்து நோக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழுவினரை சிறப்பான முறையில் வரவேற்று வழி அனுப்பி வைப்பது,
பரப்புரையை சுவரொட்டி துண்டறிக்கை மூலம் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளுக்கு தெரிவித்து சிறப்பிப்பது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது,
விடுதலை, உண்மை சந்தாக்களை அதிகமாக சேர்த்துக் கொடுப்பது
கலந்து கொண்டவர்கள்
பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன், மறைமலை நகர தலைவர், திருக்குறள் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் யாக்கோபு, மதுராந்தகம் நகர செயலாளர் செல்வம் ஓவியக்கவி நா. வீரமணி, கூடுவாஞ்சேரி மா.ராசு, ஆனந்தன் ஓவிய மாணவர் ஹரிஷ்.
கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பிறகு புத்தர் அரங்கில் நடைபெற்ற தாத்தா ரெட்டமலை சீனிவாசனின் பிறந்தநாள் விழாவில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் மாலை அணிவித்து அவரது தொண்டின் சிறப்பை விளக்கி பேசினார்.
பிறகு அனைத்துக் கட்சியினர் சார்பில் தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கூடுவாஞ்சேரி ராசு அனை வருக்கும் பெரியார் புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஓவியர் வி.ந.வீரமணி அனைவருக்கும் தேநீர் வழங்கினார். ஓவிய மாணவர் ஹரிஷ் தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கருப்பு வெள்ளை ஓவியத்தை வரைந்து இருந்தார். அவருக்கு கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் புத்தகங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா, ஒன்றிய தலைவர் யாக்கோபு ஓராண்டு விடுதலை சந்தாவும் வழங்கினர் நிகழ்ச்சிக்காக மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் ரூபாய் 500 கூடுவாஞ்சேரி மா.இராசு 200 ம.நரசிம்மன் 500 வழங்கினர்.