திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்கிறார்கள். இப்படிக் கருதுவதற்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும், பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கச் செய்யப்பட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும் எடுத்துக்கூற ஆசைப்படுகிறேன்.
(‘விடுதலை’ 11.10.1948)