தூத்துக்குடி, ஆக.21 தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்காக கிராம மக்க ளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள் ளார். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக் குடி மாவட்டம் முழுவ தும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ‘‘மாற் றத்தைத் தேடி’’ என்ற சமூக விழிப்புணர்வு கூட் டங்கள் நடத்தி பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களி டம் உறுதிமொழி எடுக் கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 19.8.2023 அன்று தூத் துக்குடி உட்கோட்டத் தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கோவில்பிள் ளைவிளையில் ஒரு மின்கம்பத்திலும், தூத் துக்குடி ஊரக உட்கோட் டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட ஜம்புலிங்கா புரம் பகுதியில் 13 மின் கம்பங்களிலும், திருச் செந்தூர் உட்கோட்டத் தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட 96 இடங்களி லும், சிறிவைகுண்டம் உட்கோட்டத்தில் 69 இடங்களிலும், மணி யாச்சி உட்கோட்டத்தில் 27 இடங்களிலும், கோவில் பட்டி உட்கோட்டத்தில் 48 இடங்களிலும், விளாத் திகுளம் உட்கோட்டத் தில் 57 இடங்களிலும், சாத்தான்குளம் உட் கோட்டத்தில் 62 இடங் கள் என மொத்தம் 373 இடங்களில் ஒரே நாளில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஜாதிய அடையாளங் களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.