புதுடில்லி, ஆக 21 இந்தியாவில் நேற்று முன்தினம் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (20.8.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 599 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 35 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து63 ஆயிரத்து 206 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.