10.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*கிரிமினல் சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள தால், மாநிலங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யலாம், ப.சிதம்பரம்.
* நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தேர்வு எழுதிய மாணவர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.அய். கைது செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலித் மக்கள் பாஜகவை ஆதரிக்க வில்லையா? கர்நாடகத்தில் இருந்து ஏழு முறை எம்.பி.யாக இருந்த ரமேஷ் ஜிகஜினகி, பாஜக தலைமையிடம் கேள்வி.
* பூரி தேர் ஊர்வலத்தில், தேரில் இருந்த பாலபத்திரர் கடவுள் சிலை விழுந்ததில் 7 பேர் காயம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது, வரும் 2025 தேர்தலில் ஆளும் நிதிஷ் குமார் அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்கிறார் கட்டுரையாளர் பேராசிரியர் திவாகர்.
தி ஹிந்து:
* சமஸ்கிருதத்திற்கு மட்டுமே அதிகமான நிதியை அளிக்கும் ஒன்றிய அரசு ஏனைய மொழிகளுக்கு ஏன் உரிய நிதி தர மறுக்கிறது? அம்மொழிகளும் தேசிய மொழிகள் தானே? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
* கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் உரையின் போது முன்னாள் துணை ஜனாதிபதியும், மேல்-சபை தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு எதிராக “இழிவான” கருத்துகளை தெரிவித்ததாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ் சிறப்புரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவரிடம் அளித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* ரேபரேலி பயணத்தில் உயிர் தியாகம் செய்த வீரரின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் : அக்னி வீரர் திட்டத் திற்கு எதிர்ப்பு.
* ராகுலை சந்தித்த பின் பேட்டி அளித்த அன்சுமனின் தாய் மஞ்சு சிங் கூறுகையில், ‘‘அக்னி வீரர் திட்டம் மூலம் ராணுவத்தை 2 விதமாக பிரிக்கக் கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.. இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசை வலியுறுத்து வதாக ராகுல் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.
– குடந்தை கருணா