திருவண்ணாமலை, ஆக. 21 – திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய அரசின் அங்கீகாரத் துடன் செயல்படும் தக்ஷிணா பாரத் ஹிந்தி பிரச்சார சபா எனும் ஹிந்தி மொழி கல்வி நிறுவனம், தமிழ்நாட்டில் ஆண் டுக்கு 2 முறை ஹிந்தி தேர்வுகளை நடத்தி சான்றுகளை வழங்கு கிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மய்யங்களில் கடந்த 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதிகளில் ஹிந்தி பிரவேசிகா தேர்வு நடத்தப்பட் டது. அதன் அடுத்த நிலையான பிராதமிக் தேர்வு நேற்று (20.8.2023) நடந்தது.
திருவண்ணாமலை மாவட் டத்திற்கான தேர்வு மய்யம், கீழ் பென்னாத்தூர் அடுத்த சோமா சிபாடி புதூரில் உள்ள அண்ணா மலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்தது. இந்த தேர்வு மய்யத்தில் 540 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந் தனர். அதன்படி, காலை 10 மணிக்கு ஹிந்தி தேர்வு தொடங் கியது. அதில், தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியராக பணிபுரியும் திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த ஷபானா (30) என்பவர், ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.
தேர்வு தொடங்கி சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில், அறையை பார்வையிட வந்த தேர்வு மய்ய கண்காணிப்பாளர், ‘ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது’ என ஷபானா விடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபானா வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இருப்பினும் அனுமதிக் காததால், தேர்வு அறையில் இருந்து அவர் வெளியேறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எஸ்டிபிஅய் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேர்வு மய்யத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஷபானா தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டார். இருப்பினும், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து தேர்வு எழுத விரும்பவில்லை எனவும், இதனை சட்டப்பூர்வ மாக எதிர்கொள்ள இருப்பதா கவும் எழுதிக் கொடுத்துவிட்டு ஷபானா தேர்வு மய்யத்தில் இருந்து சென்றார்.