தமிழ்நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

2 Min Read

சென்னை, ஜூலை 10- தமிழ் நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு: தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல் ராஜ் அமலாக்கப் பணியகம் சிஅய்டி, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியிடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.

அய்பிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி எச்.எம்.ஜெய ராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட் டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் கடலோர காவல் படை கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி வினீத் தேவ் வான்கடே காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவில் இருந்து காவல்துறை தலைமையக கூடுதல் தலைமை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அய்பிஎஸ் அதிகாரி கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கு காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் வடக்கு மண்டல காவல்துறை தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மண்டல அய்ஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப் பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக் கப்பட்டுள்ளார். காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஅய்டி அய்ஜியாக இருந்து வரும் அய்பிஎஸ் அதிகாரி அன்புவுக்கு சிபிசிஅய்டி காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு 18 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *