தஞ்சை, ஆக். 21 – 6.10.2023 அன்று தஞ்சை திலகர் திடலில் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியோடு நடை பெற உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழகப் பொறுப்பாளர்கள் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப் பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப் பினர், ஒன்றிய மேனாள் இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராம நாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோரை சந்தித்து 6.10.2023 அன்று திரா விடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்க உள்ளார்கள் என்ற செய்தியை தமிழர் தலைவர் அவர்கள் தங்களிடம் தெரிவிக்க பணித்தார்கள் என்று தெரிவித் தோம்.
தாய்கழகமாம் திராவிடர் கழகம் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது அதில் முதலமைச்சர் பங்கேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியோடு சிறப்பாக நடந்திடுவோம் என்று மகிழ்வுடன் தெரிவித்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இரா. ஜெயக்குமார், இரா.குணசேக ரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ. உத்திரா பதி, மாநகரத் தலைவர் பா.நரேந் திரன் மாநகர செயலாளர் அ.டேவிட், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரப் பாண்டியன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. ராஜவேல், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் அனை வரையும் சந்தித்தனர். 90 ஆம் அகவையில் 80 ஆண்டு பொது வாழ்வு தொண்டு நூலினை அனைவருக்கும் வழங்கினர்.