திருவாரூர், ஆக. 21- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சார கூட் டங்களின் 6ஆவது கூட்டமாக 31.7.2023 மாலை 6 மணி அளவில் திருத் துறைப்பூண்டி திருவாரூர் சீனிவாசராவ் மண்டபம் அருகில் நடைபெற்றது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் விளக்க தெரு முனைப் பரப்புரை கூட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சு.சித்தாத்தன் தலை மையுரையாற்றினார். திருத்துறைப் பூண்டி நகரச் செயலாளர் ப.நாகராஜன் வரவேற்பு உரையாற்றினார்.
கழகக் காப்பாளர் கி.முருகையன், பொதுக்குழு உறுப்பினர் தி.குண சேகரன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள்.
தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின் அவசி யம் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் தொடக்கவுரை ஆற்றினார். காக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவை நாம் ஏன் கொண் டாடுகிறோம் என்பதை பற்றியும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியும், முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளைப் பற்றியும், பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் ஏன் கொண்டாடப் பட வேண்டும் என்பதை பற்றியும், திராவிட மாடல் ஆட்சி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பணி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் மிக தெள்ளத் தெளிவாக உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட இளைஞரணி துணை செய லாளர் அஜெ.உமாநாத் நன்றிகூறினார்.
நிகழ்வில் ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஒன்றிய துணை செயலா ளர் ந.செல்வம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.கோபி, மாணவர் கழக தலைவர் கே.அழகேசன், க.நாக நாதன் பள்ளங்கோவில், கீழையூர் ஒன்றிய செயலாளர் தமிழரசன், களப்பால் ச.ஈவெரா, ஆகாஷ், மாராச்சேரி சுரேஷ், பாபு, செல்லப்பா, பிரகாஷ், திமுக வர்த்தகரணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.சிக்கந்தர், ஆகியேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் மாற்றுக் கட்சி தோழர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.