தஞ்சை, ஜூலை 9 கடந்த 13.06.2024 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 17 ஆம் ஆண்டு விழா, மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். படிப்பக தலை வர் தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா வீரக்குமார் தலைமை உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனிவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, திராவிடர் கழகக் காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் இளங்கோவன், வாழ மரக்கோட்டை இளங்கோவன், சுபாஷ் காந்தி, பெரியார் சமூக கம்பெனி இயக்குநர் தே. பொய்யாமொழி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தஞ்சை பாரத் கல்லூரி அரங்காவலர் க.விக்ரம் சூரியபிரகாஷ், தஞ்சை மாநக ராட்சி துணை மேயரும், திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்க உரை யாற்றினார்.
‘‘சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் தடை பழைமையே! புதுமையே!’’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்ப ழகன் நடுவராகவும், ‘‘பழைமையே’’ என்ற அணியில் தே.நர்மதா, அ.பரத் ஆகியோரும், ‘‘புதுமையே’’ என்ற அணியில் முனைவர் வே.இராஜவேல், ஜோ.வியானி விஷ்வா ஆகியோரும் உரையாற்றினர்.
பெரியார் படிப்பகத்தின் செயலாளர், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார் இணைப்புரையாற்றினார்.
தந்தை பெரியார் சிலை- ந.பூபதி படத்திற்கு மாலை
இந்நிகழ்வின் தொடக்கத்தில் பெரியார் படிப்பகத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை மற்றும் பொதுநலத் தொண்டர் ந.பூபதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக படிப்பக நிர்வாகி ஆ.பிராகாஷ் நன்றியுரையாற்றினார்.
13.06.2024 அன்று பிற்பகல் 11 மணியளவில் திமுக மாநில மருத்துவர் அணி சார்பில் இலவசமாக இதய நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதய நோய் நிபுணர்கள் மருத்துவர்கள் மணிராம்கிருஷ்ணன், வசந்தகுமார், சரவணப்பிரியா, போஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் 120–க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று இரத்த அழுத்தம், இசிஜி, எக்கோ சோதனைகளை செய்து கொண்டு பயனடைந்தனர்.
2024–2025 ஆம் ஆண்டிற்கான
பொது நலத் தொண்டர் ந.பூபதி நினைவு
பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலக நிர்வாகக்குழு
புரவலர்கள்:
டாக்டர் அஞ்சுகம் பூபதி
வழக்குரைஞர் சி. அமர்சிங்
மு.அய்யனார்
ரூபாவதி பூபதி
செ.தமிழ்செல்வன்
பொறியாளர் கோ.இரவிச்சந்திரன்
இயக்குநர்:
பகுத்தறிவு பேராசிரியர் ந.எழிலரசன்
தலைவர்:
இரா.வீரக்குமார்
செயலாளர்:
இரா.வெற்றிக்குமார்
பொருளாளர்:
முனைவர் வே. இராஜவேல்
துணைத் தலைவர்:
கா.கருணாமூர்த்தி
துணைச் செயலாளர்:
இரா.இளவரசன்
நிர்வாக குழு உறுப்பினர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், அ.அருணகிரி. மா.அழகிரிசாமி, முனைவர் அதிரடி க.அன்பழகன், ச.சித்தார்த்தன், கோபு.பழனிவேல், தே.பொய்யாமொழி, அ.உத்திராபதி, இரா.சரவணக்குமார், குழந்தை கவுதமன், பா.நரேந்திரன், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், இரா.சேகர், வா.ஸ்டாலின், ச.அழகிரி, இரா.செந்தூரப்பாண்டியன், பாவலர் பொன்னரசு, ச.சந்துரு, செ.ஏகாம்பரம், சு.ராஜேந்திரன், ஜெகதை ச.குமார், பவர் வசந்தன், நா.வெங்க டேசன், கை.மு.அறிவுச்செல்வன், நா.சங்கர், இரா.மணிவண்ணன், த.ரமேஷ், பூபதி ந.சக்திவேல், பூபதி ந.சந்திரசேகர், கா.சிவசாமி, அ.குழந்தைசாமி, ஆ.முருகானந்தம்,
ஆ. யோவான்குமார், ஆசிரியர் நாகநாதன்
படிப்பக பொறுப்பாளர்:
ஆ.பிரகாஷ்
பங்கேற்றோர்
மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் அ. உத்திராபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், மாநகர துணை தலைவர் கரந்தை அ.டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சரவணாக்குமார், மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுதமன், மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தலைமைக் கழக சொற்பொழிவாளர் பூவை புலிகேசி, மகளிரணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றிய தலைவர் இரா.பாலு, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி.அரங்கராசன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சுப்பிரமணியன், ஒரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.மணிகண்டன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் நா.சங்கர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் அனைத்துக் கட்சி தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.