அரியலூர், ஜூலை 9- அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.7.2024ஞாயிறு மாலை 6 மணி யளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன் கடவுள் மறுப்பு கூற, தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நாட்டின் சூழ்நிலை குறித்தும், திராவிடர் கழகம் ஆரம்பம் முதல் “நீட்”டை எதிர்த்து குரல் கொடுத்து வருவதையும் இன்று இந்திய துணைக் கண்டம் முழுவதும் நீட் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிப்பதையும்அதை மேலும் கூர்மைப்படுத்தும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி உரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெ. இளவரசன்,அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் செந்தில்,மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன் அமைப்பாளர் பெ.கோ.கோபால்,பொன்பரப்பி சுந்தரவடிவேலு, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்,திருமானூர் நகர செயலாளர் சு.சேகர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்து நிதி உதவி செய்தனர்.
கலந்துரையாடலில், மாநில ப.க. அமைப்பாளர் தங்க .சிவமூர்த்தியின் மாமனாரும் மாவட்ட ப.க ஆசிரியரணி அமைப்பாளர் வி. சிவசக்தி, வேளாண் அலுவலர் வி.வேல்முருகன் ஆகியோரின் தந்தையுமான இருங்களாக்குறிச்சி இரா. விஸ்வநாதன் மறைவிற்கும், பெரியார் பற்றாளர் அரியலூர் மேகலா அச்சக உரிமையாளர் ரெகுநாதன் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிராக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் நீட் தேர்வை திணித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை விழிப்புணர்வு பயணங்களை நடத்தி மக்கள் மத்தியில் போர்க் குரல் எழுப்பி வருவதுதிராவிடர் கழகம். இன்று இந்திய துணைக்கண்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது அதை மேலும் கூர்மைபடுத்திடும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்திற்கு 14.7.2024 ஞாயிறு அன்று வருகை தரும் பரப்புரைக் குழுவை வரவேற்று பரப்புரைக்கூட்டம் நடத்திடவும் மறுநாள் சேலத்தில் நடைபெற உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்கும் நிறைவு விழாவில் பெருந்திரளாக சென்று பங்கேற்பதெனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது எனவும், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வும் அதன் மூலம் ஏற்படும் கலவரங்களையும் தடுப்பதற்கு அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளை இந்த கலந்துரையாடல் கூட்டம் வரவேற்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கோரிக்கையினை ஏற்று திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அந்த பரிந்துரைகளை உடனே செயல்படுத்திட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள்
ஜெயங்கொண்டம் – ஒன்றிய செயலாளர்: ஆ.ஜெயராமன் உத்திரக்குடி, நகர தலைவர் : துரை. பிரபாகரன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.