விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர், ஜூலை 8- நீட் தேர்வால் பணம் கொடுத்து மருத்துவரா வோரின் கையில் ஏழை, எளிய மக்களின் உயிர்கள் விளையாடப் போகிறது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் பத்திரிகையா ளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் பாஜக சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. ஆனால், அதை மறந்து பிரதமர் மோடி ஆணவப் போக்குடன் செயல்படுகிறார். எனவே, நாடாளு மன்றம் செயல்படாத நிலை ஏற்பட்டது. மேலும், எதிர்கட்சிகளை மக்களவையில் பேசவிடாமல் செய்யும் சதித்திட்டங்கள் தொடர்கிறது. எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் பேச உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக மணிப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் தடுத்தனர். இதன் விளைவாக பிரதமர் பேசும் போது அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து முழக்கமிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அதேவேளை, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையோடும், ஒருமித்த கருத்தோடும் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பத் தயாராக உள்ளோம்.
நீட் தேர்வு என்பது பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளை மருத்துவராக்குவதற்கான வழியாக மாறியதோடு, ஏழை எளிய வீட்டுக் குழந்தைகள் மருத்துவராவதை தடுக்கும் வகையில் உள்ளது. அதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது. ஆனால், பாஜகவினர் அதை மூடி மறைக்கின்ற வேலையை செய்து வருகின்றனர்.
25 லட்சம் மாணவர்கள், மருத்துவராகும் கனவோடு கஷ்டப்பட்டு படித்து வந்தனர். ஆனால், வினாத்தாள் பணத்திற்காக வெளியாகியுள்ளது. இதனால், ஏராளமன ஏழை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகி யுள்ளது. இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பொறுப்பேற்க வேண்டும்.
நீட் தேர்வு என்பது இந்தியாவின் மருத்துவத்துறையின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். இத னால், இந்தியாவில் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப் பிடிக்கத் தெரியாதவர்களாக உருவாகப் போகிறார்கள். பணத்தைக் கொடுத்து மருத்துவரானவர்களின் கைகளில் இந்தியாவினுடைய ஏழை மக்களின் உயிர்கள் விளையாடப் போகிறது. இது, இந்தியாவிற்கு பாஜகவினர் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
விருதுநகர் சந்திப்பு ரயில் நிலை யத்தில் வந்தேபாரத் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உடனடியாக டில்லி சென்று ரயில்வே அமைச்சரை சந்தித்து மீண்டும் வந்தேபாரத் ரயிலை விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். விருதுநகரை நிராகரித்தால் மிகப்பெரிய விலையை பாஜக பெற வேண்டியிருக்கும்.
பட்டாசு விபத்து நிவாரணம் பட்டாசுத் தொழிலில் ஏற்படும் விபத்து வேறு, கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது வேறு. இரண்டையும் ஒப்பீடு செய்வது தவறாகும். விபத்தில்லாத பட்டாசுத் தொழில் வேண்டும் என்பதே அனைவரின் நிலைப்பாடாகும். ஒன்றிய அரசு பட்டாசுத் தொழி லுக்கு உரிமம் வழங்குகிறது. இத் தொழிலில் பல முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கிறது. ஆனால், எது நடந்தாலும் எனக்குத் தெரியாது என கைகழுவுவதை நிறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது பாஜக அரசு தருவதில்லை. இனி நடக்கும் விபத்துக்கு பிரதமர் நிதியும் வர வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்துவோம். இரு அரசுகளும் சேர்ந்து நிவாரணம் வழங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.