கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்ட வேண்டும்: பட்டினிப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட சீனா ஆக்கிர மிக்கவில்லை” என்று பிரதமர் மோடி கூறியது முழுப் பொய் என லடாக்கில் ராகுல் காந்தி பேட்டி.
* உண்மையான ஜாதியற்ற சமூகத்திற்கு, முதலில் நாம் பிரச்சினையை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அனுபவத்தை மறுப்பது அவநம்பிக்கையின் இடைவெளியை விரிவுபடுத்துகிறது என்கிறார் பேராசிரி யர் அதிதி நாராயணி பஸ்வான்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ஒரு முஸ்லீம் இந்த நாட்டில் இருக்கும் வரை பிரிவினை முழுமையடையாது என்று ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா அவதூறு பேச்சு – காவல் துறையினர் போராட்டத்தை பாதியில் நிறுத்தினர்.
– குடந்தை கருணா