வேலூர், ஜூலை 8- வேலூர் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம், வேலூரில் 07.07.2024 ஞாற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி தலைமை வகித்தார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன், மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் இர.க.இனியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்,
வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் பங்கேற்க வரும் தோழர்களை மாவட்ட எல்லையில் சிறப்பாக வரவேற்று, மாவட்டத்தில் நான்கு இடங்களில் சிறப்பாக பரப்புரை கூட்டத்தை நடத்துவது குறித்தும் , தோழர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குதல், நம் மாவட்டத்தின் சார்பில் இளைஞரணி மாணவர் கழகத் தோழர்கள் இரு சக்கர வாகனத்தோடு பெருமளவில் கலந்துக்கொண்டு இந்நிகழ்வை சிறப்பாக நடத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலளார் உ.விஸ்வாநதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கு.இளங்கோவன், க.சிகாமணி, மாவட்ட அமைப்பாளர் நெ.கி.சுப்பிர மணியன், மாவட்ட காப்பாளர் ச.கலைமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி, குடியாத்தம் நகர கழக தலைவர் சி.சாந்த குமார், அணைக்கட்டு ஒன்றிய கழக அமைப்பாளர் பொ.இரவீந்திரன், மாநகர மாணவரணி அமைப்பாளார் அ.ஜெ.ஓவியா, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
11.07.2024 சென்னை முதல் சேலம் வரை நடைபெற உள்ள நீட தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வயுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
மாபெரும் இரு சக்கர வாகன பரப்புரை பயணம், நமது வேலூர் மாவட்டத்தல் 13.07.2024 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
13.07.2024 அன்று இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை வேலூர் (கழக) எல்லையான ஆற்காட்டில் காலை 9.00 மணிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இரு சக்கர வாகன பரப்புரை பயணம் காலை 9.30 மணியளவில் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நடத்துவது எனவும், இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன் தலைமையில் நடத்துவது என தீர்மானக்கப்பட்டது.
இப்பயணம் தொடர்ச்சியாக காட்பாடியில் காலை 10.30 மணியளவில் சித்தூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன் தலைமையில் நடத்துவதென தீர்மானிக்கபட்டது.
இரு சக்கர வாகன பரப்புரை பயணம் கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் காலை 11.30 மணியளவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி தலைமையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக இப்பயணம் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் இர.க.இனியன் தலைமையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
15.07.2024 அன்று சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இரு சக்கர வாகன பரப்புரை பயண நிறைவு விழாவில் நம் மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.