சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் அனுமதியின்றி கட்டடங்கள்: ஆய்வு செய்ய குழு அமைத்த அறநிலையத்துறை

2 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ.18 சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானங் கள் மேற்கொள்ளப்படுகிறதா என அற நிலையத்துறை ஆய்வு செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை அடுத்து 6 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள் ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங் கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்தக் கோவில் தொல்லியல் துறை யினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்தின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள கோவிலானது தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக் கப்பட்டுள்ளதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் அனுமதியின்றி 100 அறைகள் கட்டப்படு வதாகவும் கூறி கோவில் தீட்சிதரான நடராஜ் தீட்சிதர் சென்னை உயர்நீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நந்தவனங்கள் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழை மையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக வும் அதனால்  தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தி ருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசா ரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப் படுகிறதா? என ஆய்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட் டனர்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நீதிபதிகள் முன்பு விசார ணைக்கு வந்தபோது, அனு மதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப் பிலும், தமிழ்நாடு தொல்லியல்துறை தரப் பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோயிலில் அனுமதியின்றி கட்டப் பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அற நிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தொல் லியல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை தர 6 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். இது பொதுக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்த மல்ல. தீட்சிதர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவிலை நிர்வகித்து வரலாம். நிர்வாகத்தில் தவறுகள் ஏதே னும் நடைபெற்றால் இந்து சமய அற நிலைத்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்” என்று உச்சநீதி மன்ற தீர்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *