பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குற்றாலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களில் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, குறிப்பெடுத்தல் பயிற்சி போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து சில ஆண்டுகளாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த தமிழ்சுடருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (5.7.2024) (படம் 2) தென்காசி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட சண்முகம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் (குற்றாலம், 5.7.2024)
பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி வீரையன் மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா தொகை ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (69 விடுதலை சந்தா) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தஞ்சை, 6.7.2024)
இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்த மாணவர்கள் 50 சதவிகித கழிவு விலையில் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கினர்.
எழுத்தாளர் அருணகிரி தனது நூல்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (குற்றாலம், 5.7.2024)
ராஜபாளையம் நரேந்திரகுமார் எழுதிய ‘திராவிட மரபணு’ என்ற இயக்க புத்தகத்தை தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தமிழர் தலைவரிடம் வழங்கினார் (குற்றாலம், 5.7.2024)