சென்னை, ஆக. 22- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பு வதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவு களை நிறைவேற்ற உதவும் வகையிலும் ‘முதல் வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நேற்று (21.8.2023) தொடங்கி வைத்தார்.
இதை செயல்படுத் துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவ னத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 பசுமை ஆர்வலர்கள், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, சுற்றுச் சூழல் மற்றும்காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தீபக் எஸ்.பில்கி, சிறப்புச் செயலர்கள் அனுராக் மிஸ்ரா, ரிட்டோ சிரியாக், கூடுதல் இயக்குநர் மனிஷ் மீனா, அண்ணா பல்கலை. துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், அறிவாற்றல் ஆய்வு நிறு வனப் பேராசிரியர் மற்றும் தலைவர் வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும். திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகி யோர் தகுதியின் அடிப்படையில் இந்த திட்டத் துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை ஆகிய மூன்று துறைகளின் துணை கொண்டு, தமிழ் நாட்டை மற்ற மாநி லங்களுக்குத் தலைமை வகிக்கும் வகை யில், சுற்றுச் சூழல் ரீதியாக முன்னேறிய மாநிலமாக மாற்றுவது, சுற்றுச் சூழல் சார் கொள்கைகள் வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தில் உறுதி மிக்க இளைஞர்களை ஈடுபடுத்தல், தமிழ் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சேவைகளை சிறப்பாக வழங்குவதில் மாவட்ட நிர் வாகங் களுக்கு உறுதுணையாக இருத்தல், சுற்றுச் சூழல் கொள்கை மேலாண்மைக்கு வலு வான நிறுவன அமைப்பு களையும், செயல் முறைகளையும் உருவாக்குதல் போன்றவை யாகும்.
பசுமை ஆர்வலர்கள், தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச் சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கியப் பங்காற்றுவர்.
சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” போன்ற சூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்கு வித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர். இரண் டாண்டுகள் சேவை புரியும் காலகட்டத்தில், அவர்களுக்கு மாதம் ரூ.60,000 உதவித் தொகை வழங் கப்படும். அதேபோல, திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங் கப்படும்.
2 ஆண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து “கால நிலை மாற்றம் மற்றும் நிலைத் தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்புக்கான பட்டத் தையும் பெறுவர். இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசு இப்பணியை மேற் கொள் கிறது. இன்றைய இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலை வர், மாவட்ட வனத்துறை அதிகாரி களுடன் இணைந்து பசுமை இளைஞர்கள் பணியாற்றுவார்கள்” என்றார்.