தருமபுரி, ஆக. 22- பண்டஅள்ளியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பண்டஅள்ளியில் 20-8-2023 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர் கு.சரவணன் தலைமையில், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கதிர், கழக காப்பாளர் அ. தமிழ்செல்வன் முன்னிலையில், தருமபுரி நகரத் தலைவர் கரு.பாலன் கொள்கை முழக்கமிட மேனாள் மாவட்ட தலைவர்கள் மு. பரமசிவம்,
வீ. சிவாஜி ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். விடுதலை வாசகர் வட்ட தலை வர் க.சின்னராஜ், பென்னா கரம் ஒன்றிய செயலாளர் மு. சங்கரன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் காமலாபுரம் இராஜா, மகேஸ்வரி, உதய குமார், தேவராஜ், சரவணன், ராஜேஷ்குமார், பூங்குழலி, குழல் அரசி மற்றும் ஊர் பொது மக்கள் உறவினர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.