வல்லம், ஜூலை 6- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருக்கும் முதலா மாண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் மென்திறன் மேம்பாடு பற்றியும் எடுத்துக் கூறும் விதமாக 24.06.2024 முதல் 28.06.2024 வரை முதலாமாண்டு அறிமுகப் பயிற்சி (Induction Programme) நடைபெற்றது.
24.06.2024 அன்று காலை முதலா மாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தும் நிகழ்வு (Ice-Breaking) நடைபெற்றது. மதியம் நடை பெற்ற வகுப்பில் முதலாமாண்டு மாணவர் களுக்கு பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா உரையாற்றினார். பின்பு துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் மாணவர்களிடையே தங்கள் துறைப்பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
பேச்சாளர் பெரியார் செல்வன்
இரண்டாவது நாள் 25.06.2024 அன்று திராவிடர் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் “தலைமைப்பண்பு” என்ற தலைப்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உன்னதமான உரை நிகழ்த்தினார்.
அன்று மதியம் முன்னாள் மாணவி ஜீவா (Architect) மற்றும் மாணவர் முருகன் (Project Manager) தாங்கள் வெற்றி பெற்ற அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களிடையே கூறியதோடு அவர்களின் எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
பயிற்சியின் மூன்றாவது நாள் 26.06.2024 அன்று தஞ்சாவூர் மனோதத்துவ நிபுணர் டாக்டர் அகமது நிஷா “போதை பொருட்களும் சமூக அவலங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். போதை பழக்கங்களால் இளைஞர் சமூகம் எவ்வாறு சீரழிகிறது என்று கூறிய அவர் மாணவர்கள் தங்கள் உடல் நலன் மற்றும் உள்ள நலன் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
MOP துறையைச் சேர்ந்த பேராசிரியை ஆர்.லலிதா ISO பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ECE துறையைச் சேர்ந்த துறைத்தலைவர் க.ரோஜாஅNBA, IE, ISTE, Vision & Mission பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
உணவு இடைவேளைக்கு பிறகு தஞ்சாவூர் ரென் அகாடமியின் இயக்குநர் விஜய்மித்ரா “ஆளுமை மேம்பாடு” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவ ஆலோசகர் மைக்கேல் ராஜ் மாணவர்களிடையே கல்லூரியின் விதி முறைகள் பற்றி உரை நிகழ்த்தினார்.
அனைத்து துறைத் தலைவர்களும் தங்களது துறைகளைப் பற்றி தெளிவாகவும். மாணவர்களுக்கு புரியும் படியும் எடுத்துக் கூறினார்.
நான்காவது நாள் 27.06.2024 அன்று வளரிளம் பருவத்தின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள்” என்ற தலைப்பில் இப்பாலிடெக்னிக் பேராசிரியர் ஆர்.அய்யநாதன் உரையாற்றினார். தஞ்சாவூர் பிரைன் ஸ்கில் மேலாண்மை இயக்குநர் பாலாஜி “மாணவர்களின் வளமான வாழ்க்கை” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
அய்ந்தாம் நாள் 28.06.2024 அன்று கோயம்புத்தூர் பிரிம் இண்டஸ்ரி மேலாண்மை இயக்குநர் ஜெ.கண்ணன் “தொழிற்சாலைகளின் நடைமுறைகள்” பற்றி மாணவர்களிடையே தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். தேசிய மாணவர் படை அலுவலர்கள் கே.நீலாவதி மற்றும் ஆர்.விவேக் ஆகியோர் மாணவர்களிடையே தேசிய மாணவர் படையைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆர்.மணிவண்ணன் மாணவர்களிடையே நாட்டு நலப்பணித்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முதலாமாண்டு துறைத்தலைவர் பி.சாந்தி, கணக்கு புதிர்கள் பற்றியும் இயற்பியல் பேராசிரியர் எஸ்.பாலமுருகன் மற்றும் வேதியியல் பேராசிரியை எல்.சசிகலா, புராஜெக்ட் பற்றி விளக்கி கூறினார்கள்.