6.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரிட்டன் தேர்தலில் சுனக் தலைமையிலான டோரி கட்சி ஆட்சியின் சமூக பொருளாதார வீழ்ச்சி, தொழிலாளர் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது என்கிறது தலையங்க செய்தி.
* விஷச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்பது மிக அதிகம். மறு பரிசீலனை செய்க என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தல்.
* மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆகஸ்ட் மாதத்தில் கவிழும், லாலு பிரசாத் நம்பிக்கை.
*121 பேரை பலி கொண்ட விபத்து; ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக வரலாற்றை மாற்றி எழுத முயல்கிறது: ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை இகழ்ந்தது, விவேகானந்தர் மதவெறியை இகழ்ந்தார் என்கிறார் கட்டுரையாளர் ஜான் பிரிட்டாஷ், எம்.பி.
* கடந்த சில வாரங்களாக பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததற்கு “அசாதாரண அளவு” மழை பெய்தது தான் காரணம் என்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி.
தி இந்து:
* இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்.
* தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கண்டனம்.
தி டெலிகிராப்:
* கிராமவாசிகளின் 13 ஆண்டுகளாக இடைவிடாத சட்டப் போராட்டம் தான் அதானி குழும நிறுவனத்திடம் ஒப்படைத்த கிட்டத்தட்ட 108 எக்டேர் மேய்ச்சல் நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பக் கொடுக்க குஜராத் அரசை நிர்ப்பந்திக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அக்னிபாத் திட்டம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டுக்குள் சுமார் 20 அக்னி வீரர்கள் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன.
* முறைகேடுகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய நீட்-யுஜி, 2024 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையும் உச்சநீதிமன்றத்தில், அதை ரத்து செய்வது “எதிர்விளைவு” மற்றும் “தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்” என்று மனு தாக்கல். பெரிய அளவில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என வாதம்.
– குடந்தை கருணா