2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் தமிழாசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமானகே.தேவிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், அரசமைப்புச் சட்டக்குழு, பண்பாடு மற்றும் கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கும், மாணவர் மன்றத் தலைவர், துணைத் தலைவர் விளையாட்டு அணிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்றச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களுக்கும், மற்றும் மன்றங்களுக்கான பொறுப்பாசிரியர்களுக்கும் அவர்களுக்கான ‘பேட்ஜ்’ அணிவித்து சிறப்பு செய்தார். பள்ளியின் மாணவர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி செல்வி.எஸ்.ரவுலா பாத்திமா தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு விழா இனிதே நிறைவுற்றது.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா
1 Min Read
		 
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			

 
		 
		 
		 
		 
		 
		 
		 
		