பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘பிரிட்டனின் ’ஸ்ட்ராட்ஃபோர்ட் அன்ட் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்’’ என கூறியுள்ளார்.