சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைத் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூன்றையும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி (Labour Party) தேர்தல் அறிக்கையில் திட்டங்களாக அறிவித்து பிரிட்டன் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருமிதத்து டன் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அத்திட்டங்களில் “முதலமைச்சரின் காலை உண வுத் திட்டம்”, “நான் முதல்வன் திட்டம்”, “கலைஞர் கனவு இல்லம் திட்டம்” ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18.54 இலட்சம் மாணவ, மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டி ருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இத்திட்டத்தை, தெலங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் அவர்கள் இத்திட்டத்தை வர வேற்றுத் தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.
நான் முதல்வன்
நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் பொறியியற் கல்வி மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,48,149 இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கு வதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறி விக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த மூன்று திட்டங்களையும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆத ரவைப் பெற்று மாபெரும் வெற்றி கண்டுள்ளது.