பல்வேறு விதமான கலாச்சாரங்கள் மற்றும் வளங்களை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கான சிறந்த வழி என்றால் ரயிலில் பயணிப்பது தான். இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும், சுமார் 7,000-திர்க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு நாளில் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இது ஒரு பிரம்மாண்டமான அமைப்பாக இருந்தாலும், இதில் பயணிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில விதிகள் உள்ளன.
ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ஒரு சில ரயில்வே துறையின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றவில்லை என்றால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை கூட ஏற்படலாம். எனவே எப்பொழுதும் ரயிலில் பயணிப்பவர்கள் ரயில்வே துறையின் விதிமுறைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான இந்திய ரயில்வே விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது
பயணச் சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்து யாரேனும் பிடிப்பட்டால், அவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அந்த பயணச் சீட்டின் விலையுடன் சேர்த்து குறைந்தபட்சமாக ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இ-டிக்கெட் அவசியம்
இணையத்தின் மூலம் பயணச் சீட்டு எடுத்து இருந்தால், எலக்ட்ரானிக் டிக்கெட் என்று கூறப்படும் இ-டிக்கெட் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இ-டிக்கெட்டின் உண்மையான பிரதியை பயணச் சீட்டு ஆய்வாளரிடம் காண்பிக்க வேண்டும். பயணச் சீட்டு ஆய்வாளர் உங்கள் இ-டிக்கெட்டைச் சரிபார்க்க வரும்போது உங்களிடம் அந்த அடையாள அட்டை இல்லை என்றால், நீங்கள் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்வார். இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள அதே அபராதங்கள் பொருந்தும்.
வாங்கிய டிக்கெட்டுக்கு மாறாக
உயர் வகுப்பு இருக்கையில் பயணிப்பது
ஒருவர் அனுமதி பெற்ற அல்லது பயணச் சீட்டு வாங்கியதை விட உயர்ந்த வகுப்பில் பயணம் செய்து பிடிபட்டால், அதிகப்படியான அபராதங்களுடன் அந்த வகுப்பில் செல்வதற்கான கட்டணத்தையும், அந்த நபர் செலுத்த வேண்டும். பயணச் சீட்டு இல்லாமல் இளைஞர் பயணம் செய்தால் அவருக்கு குறைந்தபட்ச அபராதமான ரூ. 250 மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் பயணம்
ஒருவர் குடிபோதையில் ரயிலில் பயணம் செய்தாலோ அல்லது பயணம் செய்யும் போது மது அருந்தினாலோ, அந்த நபர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்கு 6 மாத சிறைதண்டனையுடன் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
புகை பிடித்துக் கொண்டே பயணம்
ரயிலில் பயணிக்கும் பொழுது புகை பிடிக்க அனுமதி இல்லை. யாரேனும் புகை பிடித்து மாட்டிக்கொண்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
அவசரச் சங்கிலி
இந்திய ரயில்வே சட்டம் 141ஆவது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில முறை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.