சென்னை, ஜூலை5- தமிழ்நாட்டில் அலைபேசிக்கு சிக்னல் கூட கிடைக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடு தல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
எப்படி இணைவது?
தற்போது புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள், ஏற்கெனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணி யில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த மாத இறுதிவரை அவர்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இணையம் இல்லா இடத்திலும். அதன்படி தமிழ்நாட்டில் அலைபேசி சிக்னல் கூட கிடைக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது.
நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கே வங்கிக்கு பணம் கொடுக்காமல் பணவிடை அஞ்சல் போல கூட்டுறவு வங்கி வழியாக பணம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் இல்லையென்றால் கணக் குத் தொடங்கி அங்கே பணம் வழங்கப்படுகிறது.
பல இடங்களில் அலைபேசி சிக்னல் கூட இருக்காது. இதனால் பணத்தை கொடுப்பதில் சிக்கல் வரும். இதனால் கூட்டுறவு வங்கிகளை தமிழ்நாடு அரசு பயன் படுத்தி அதன் வழியாக பணம் வழங்க முடிவு செய்துள்ளது.