தஞ்சாவூர், ஆக. 23 – தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்ப தற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் தோட்டக்கலை துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 202220-23ஆ-ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படு த்தப் பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண் கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத் தில் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in./tnhortnet என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அல் லது அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலர் களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.